» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் விஷம் குடித்ததார் - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

செவ்வாய் 12, ஜனவரி 2021 8:47:38 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்பு செயலாளர் பவானி வேல்முருகன் தலைமையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திசையன்விளை சுந்தர விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பையா மனைவி இசக்கியம்மாள் (வயது 50) என்பவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், பிரவீனா மற்றும் போலீசார் இசக்கியம்மாளிடம் இருந்து விஷ பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை மீட்டு ஆட்டோவில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், திசையன்விளையில் நாங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இடத்தை சிலர் தங்களுடைய நிலம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் எங்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் குடியிருந்த இடத்திற்கு எங்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory