» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் பலத்த மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

செவ்வாய் 12, ஜனவரி 2021 8:51:31 AM (IST)


தூத்துக்குடியில் பலத்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான  வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே, திருச்செந்தூர் ரோடு, தபால் தந்தி காலனி, தூத்துக்குடி அரசு மருத்துவமனை, குரூஸ் பர்னாந்து சிலை பகுதி, டபிள்யூ.ஜி.சி. ரோடு, டூவிபுரம் மெயின்ரோடு அண்ணாநகர் 1-வது தெரு, அரசு ஊழியர் குடியிருப்பு, போல்டன்புரம், ராமசாமி புரம், முதன்மைக்கல்வி அலுவலகம், தாலுகா அலுவலகம் பகுதி, அந்தோணியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஜார்ஜ் ரோடு, மறக்குடி தெரு, முத்தையாபுரம், சூசைநகர், அத்திமரப்பட்டி, பிரையன்ட் நகர் 3, 4 மற்றும் 5-வது தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால்100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழை பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு முடக்கி போட்டு உள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகை காலமாக உள்ள நிலையில் லாரிகளில் கொண்டு வரப்பட்டு உள்ள கரும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த மழை பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.


மக்கள் கருத்து

தூத்துக்குடி ஏரியா காரன்Jan 12, 2021 - 01:38:49 PM | Posted IP 162.1*****

மாநகராட்சி முதல்ல சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடி வைத்து அடைத்து இருப்பதே தான் , அங்கு தேங்கி இருக்கும் தண்ணீர் தான் காரணம் , எல்லா தெருவிலும் பாதாள சாக்கடை தவிர்த்து கிணறுகள் அமைத்தால் மழைநீர் மண்ணுக்குள்ளே போய் விடும் , சாலையில் தண்ணீர் தேங்கி இருக்காது . எல்லாம் துட்டு பசங்க.

DevabalanJan 12, 2021 - 11:32:37 AM | Posted IP 162.1*****

dear sir, Already our area (Annai Theresa Nagar) is flooded with rain water, now the present rain fall made the situation worst than before. Right from 2015 after the flood, we are asking for common drainage to connect Buckle canal. Nothing happened so far. Request the Govt. officials to look into the matter and execute so as to solve the ongoing problem permanently without further delay. Every year during rainy season we are suffering. thanks and regards Devabalan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory