» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக்கில் வந்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

புதன் 13, ஜனவரி 2021 11:55:44 AM (IST)

குற்றாலம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம்  பைக்கில் வந்து நகை பறித்த ஆசாமியை  போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் போலீஸ்சரகம் அண்ணா தெருவை சேர்ந்தவர் பரமசிவன்.  இவரது மனைவி பாலம்மாள் (77) .  இவர் கடந்த 4ம் தேதி அதிகாலையில் அதே ஊரில் உள்ள பள்ளியின் பின்புறம் குப்பைகளை கொட்டுவதற்கு நடந்து சென்றுள்ளார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு மர்ம ஆசாமி பால் அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து அப்போது பாலம்மாள் அந்த சங்கிலியை வலுவாகப் பிடித்துக் கொண்டதால் சங்கிலி அறுந்து 7 கிராம் எடையுள்ள சங்கிலி பாலம்மாள் கையில் சிக்கிக் கொண்டது. மீதமுள்ள 9 கிராம் சங்கிலியை மர்ம ஆசாமி பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி பாலம்மாள் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் தகவலறிந்த குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டார் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 41) என்பவரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் பாலம்மாளிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதை மணிகண்டன் ஒப்புக்கண்டுள்ளார்.

உடனடியாக மணிகண்டனை கைது செய்த குற்றாலம் ஆய்வாளர் சுரேஷ் மணிகண்டனிடம் இருந்து பாலம்மாளின் தங்கச் சங்கிலி மற்றும் தங்கச் சங்கிலியைப் பறித்துச் செல்வதற்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் விடுமுறையில் ஊருக்கு வந்த மணிகண்டன் பாலம்மாள் அதிகாலையில் நடந்து சென்று அந்த பகுதியில் குப்பை கொட்ட செல்வதை கவனித்த மணிகண்டன் மறுநாள் தனது பைக்கில் சென்று அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். குற்றாலம் போலீசார் அவரை செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். செங்கோட்டை நீதிபதி மணிகண்டனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் மணிகண்டனை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory