» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூட்டுறவு கடன் சங்க காவலாளி தற்கொலை

வெள்ளி 15, ஜனவரி 2021 5:38:38 PM (IST)

தேவிபட்டணம் கூட்டுறவு நாணய கடன் சங்க காவலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர் .

தென்காசி மாவட்டம் தேவிபட்டணம் கீழூர் ராமசாமி யாபுரம் பகுதியில் வசித்தவர் மாரியப்பன் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 57 ). இவர் தேவிபட்டணம் கூட்டுறவு நாணய கடன் சங்கத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.  இவர் ஓய்வு பெற இன்னும் ஆறு மாத காலமே உள்ளது. இவருக்கு குடி பழக்கம் உண்டு. கடந்த மூன்று மாத காலமாக இவர் நெஞ்சுவலி மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இதனால் இவர் கடந்த 10 நாட்களாக மது அருந்திவிட்டு தூக்கமில்லாமல் சுற்றித்திரிந்து உள்ளார்.இந்நிலையில் தமிழ்ச்செல்வன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.  போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory