» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 18, ஜனவரி 2021 10:23:02 AM (IST)

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்ததால், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால், உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 92 ஆயிரம் கன அடி வரையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, ஆற்றங்கரைகளில் வசித்த மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். மேலும் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெள்ளப் பெருக்கு குறைந்துள்ளதால், சுமார் 6 நாட்களுக்கு பின்னர் அருவிகளில் குளிப்பதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் 6ம் தேதி மகளிர் தின விழா விளையாட்டுப் போட்டி
வியாழன் 4, மார்ச் 2021 4:31:01 PM (IST)

கல்வி நிலையங்களை பிரசார இடமாக மாற்றிய ராகுல் மீது நடவடிக்கை: அா்ஜூன் சம்பத் கோரிக்கை!
வியாழன் 4, மார்ச் 2021 4:26:09 PM (IST)

திருநங்கை மர்ம சாவு : போலீசார் தீவிர விசாரணை
வியாழன் 4, மார்ச் 2021 4:07:39 PM (IST)

கணியில் தமிழ் சிறப்பு இடம் பெற காரணமானவர் : கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு வைகோ இரங்கல்!!
வியாழன் 4, மார்ச் 2021 3:41:58 PM (IST)

நெல்லை அருகே நிலத்தரகர் கொலையில் 4 பேர் கைது
வியாழன் 4, மார்ச் 2021 8:43:33 AM (IST)

முண்டந்துறை வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை
வியாழன் 4, மார்ச் 2021 8:42:06 AM (IST)
