» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது மர்ம நபர் கைவரிசை!!

திங்கள் 18, ஜனவரி 2021 10:43:59 AM (IST)

சுரண்டை அருகே ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த கீழச்சுரண்டை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெபமணி பாலச்சந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அம்சுமணி (60) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். அவருடைய நகைகள் ஜெபமணி வீட்டில் இருந்தது. நேற்று கீழச்சுரண்டையில் நடைபெற்ற ஜெபக்கூட்டத்திற்கு கணவன்-மனைவி இருவரும் சென்றுள்ளனர். 

கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவுகள் திறந்திருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த தங்க செயின், கம்மல்கள் திருட்டு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். இதுகுறித்து சுரண்டை போலீசில் ஜெபமணி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அதே தெருவில் வசிக்கும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory