» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை : 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

செவ்வாய் 19, ஜனவரி 2021 8:58:10 AM (IST)

சங்கரன்கோவில் அருகே ஊர் நாட்டாண்மை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுெதாடர்பாக 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே குன்னக்குடி கிராமம் உள்ளது. தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லை பகுதியாக இந்த கிராமம் அமைந்துள்ளது. இதற்கு அடுத்து சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர், வள்ளிநாயகம் (52). விவசாயியான இவர் அந்த ஊர் நாட்டாண்மையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த ஊரில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதில் வள்ளிநாயகம் தலையிட்டு இருதரப்பினரையும் சமரசம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஒரு தரப்பினர் தாக்கியதால் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் வள்ளிநாயகம் புகார் செய்தார். இந்தநிலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளிேய சென்ற வள்ளிநாயகம் மீண்டும் திரும்பவில்லை. இதுதொடர்பாகவும் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். இதற்கிடையே, அவரது இருசக்கர வாகனம் குன்னக்குடி கிராமத்தில் மெயின் ரோட்டில் கிடந்தது. எனவே அங்கு அவரை தேடினர். அப்போது, அங்குள்ள முட்புதருக்குள் ரத்தக்காயங்களுடன் வள்ளிநாயகம் பிணமாக கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பக ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து, வள்ளிநாயகத்தின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாவட்ட எல்லைப்பகுதியாக இருப்பதால் ராஜபாளையம் டிஎஸ்பி நாகசங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முறம்பு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வள்ளிநாயகம் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory