» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண் போலீசிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் கைது : 10½ பவுன் நகை மீட்பு - கார் பறிமுதல்

புதன் 20, ஜனவரி 2021 9:04:23 AM (IST)

பாளையங்கோட்டையில் பெண் போலீசிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10½ பவுன் நகை மீட்கப்பட்டதுடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மனைவி மகாலட்சுமி (36). இவர் பாளையங்கோட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 23ம் தேதி மாலையில் மகாலட்சுமி பணி முடிந்து மொபட்டில் பொதிகை நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்ததால், மொபட்டை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, செல்போனை எடுத்து பேசினார்.

அந்த நேரத்தில் காரில் வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென மகாலட்சுமி கழுத்தில் கிடந்த 10½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் குற்றப்பிரிவு போலீசார் பாளையங்கோட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு காரில் வந்த 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் பெண் போலீசிடம் நகை பறித்ததை ஒப்புக் கொண்டனர். மேலும் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் சத்யராஜ் (28), மறவன் மடத்தை சேர்ந்த சிலுவை ராஜேந்திரன் மகன் அந்தோணி ஜேசுபாலன் (28) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, 10½ பவுன் தங்கச் சங்கிலியை மீட்டனர். மேலும் அவர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் வேறு எங்கேனும் கைவரிசை காட்டி உள்ளார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory