» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குளத்தில் மூழ்கி உசிலம்பட்டி கல்லூரி மாணவர் பலி: தென்காசி அருகே கோகம்

புதன் 20, ஜனவரி 2021 10:20:30 AM (IST)

தென்காசி அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னன் என்பவரது மகன் சிவபிரகாஷ் (21). இவர் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இளநிலை வேளாண்மை துறை இறுதியாண்டு படித்து வந்தார். இவரும் இவரது வகுப்பு மாணவர்கள் 8 பேரும் குற்றாலத்திற்கு ஆய்வு கட்டுரைக்காக தகவல் சேகரிக்க வேனில் வந்தனர். இவர்கள் அனைவரும் தென்காசி அருகே ஆயிரப்பேரி குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது சிவபிரகாஷ் எதிர்பாராதவிதமாக மூச்சு திணறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். 

இதுகுறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலர் கவிதா, உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள் மற்றும் தென்காசி நிலைய (பொறுப்பு ) அலுவலர் சுந்தர்ராஜன், ஏட்டு கணேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ரப்பர் படகு மூலம் குளத்தில் தேடி பார்த்து சிவபிரகாஷ் உடலை மீட்டனர். இதுகுறித்து குற்றாலம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory