» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த பெண் பாம்பு கடித்து பலி: தென்காசி அருகே சோகம்!!
வியாழன் 21, ஜனவரி 2021 5:38:57 PM (IST)
வாசுதேவநல்லூர் அருகே உளுந்தம் பயறு அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த பெண் பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகேயுள்ள தேசியம்பட்டி (எ) நாரணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காசிப்பாண்டி மனைவி கனியம்மாள் (60). இவர் சுப்பையாபுரம் அருகே சீதையம்மாள் என்பவரது நிலத்தில் உளுந்தம் பயிர் அறுவடையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவரது காலில் பாம்பு கடித்துள்ளது. இதனை கண்டு அலறிய கனியம்மாளை அவருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆட்டோ மூலம் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கனியம்மாள் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் 6ம் தேதி மகளிர் தின விழா விளையாட்டுப் போட்டி
வியாழன் 4, மார்ச் 2021 4:31:01 PM (IST)

கல்வி நிலையங்களை பிரசார இடமாக மாற்றிய ராகுல் மீது நடவடிக்கை: அா்ஜூன் சம்பத் கோரிக்கை!
வியாழன் 4, மார்ச் 2021 4:26:09 PM (IST)

திருநங்கை மர்ம சாவு : போலீசார் தீவிர விசாரணை
வியாழன் 4, மார்ச் 2021 4:07:39 PM (IST)

கணியில் தமிழ் சிறப்பு இடம் பெற காரணமானவர் : கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு வைகோ இரங்கல்!!
வியாழன் 4, மார்ச் 2021 3:41:58 PM (IST)

நெல்லை அருகே நிலத்தரகர் கொலையில் 4 பேர் கைது
வியாழன் 4, மார்ச் 2021 8:43:33 AM (IST)

முண்டந்துறை வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை
வியாழன் 4, மார்ச் 2021 8:42:06 AM (IST)
