» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு

சனி 23, ஜனவரி 2021 10:11:34 AM (IST)செங்கோட்டை நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது ஆய்வு மேற்கொண்டு நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது ஆய்வு மேற்கொண்டார். . மாவட்ட நீதிபதியை செங்கோட்டை நீதிபதி பாலாஜி வரவேற்றார். நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி நசீர் அகமது மரக்கன்று நட்டார். இந்நிகழ்ச்சியில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் பரணீந்தர், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆ.வெங்கடேசன், துணைத் தலைவர் முத்துக் குமாரசாமி. செயலாளர் அருண், பொருளாளர் மூர்த்தி, மூத்த வழக்கறிஞர் சின்னராஜ், வழக்கறிஞர் சங்க இணைச் செயலாளர் கார்த்திகை ராஜன் மற்றும் வழக்கறிஞர்கள் அமானுல்லாகான், கோமுராஜ்,ஆதி பாலசுப்பிரமணியன், சக்திவேல், சுடர் முத்தையா, கரிசல் அருண் , சத்திய சங்கர், மாரிக்குட்டி , நல்லையா , கந்தசாமி, திருநாவுக்கரசு ,பழனிக் குமார் , கோபிநாத்,ராஜாராம், சிதம்பரம் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வலர் ஜெயராம சுப்பிரமணியன் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory