» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்டத்தில் மீன் விரலிகள் இருப்பு செய்யும் திட்டம் துவக்கம்
சனி 23, ஜனவரி 2021 3:41:42 PM (IST)

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020-21-ன் கீழ், மீன் விரலிகள் இருப்பு செய்யும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சி கிராமத்திலுள்ள கடம்பன் குளத்தில் மீன்வளத்துறையின் மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020-21-ன் கீழ், மீன் விரலிகள் இருப்பு செய்யும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து குளங்களில், மீன் உற்பத்தியினை அதிகரித்திட 30 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு ஹெக்டேருக்கு நன்கு வளர்ந்த மீன் விரலிகள் 5000 வீதம், 5 குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையர்தவனை மேலகுளம் (35,000 மீன் விரலிகள்), இடையர்தவனை கீழக்குளம் (22,000 மீன் விரலிகள்), கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடம்பன்குளம் (25,000 மீன் விரலிகள்), வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுளம் (55,000 மீன் விரலிகள்), செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்குகுளம் (12,500 மீன் விரலிகள்) ஆகிய 5 பஞ்சாயத்து குளங்களில் மொத்தம் 1,50,000 நன்கு வளர்ந்த கெண்டைரக மீன் விரலிகள் இருப்பு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மீன்வளதுறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம், மீன்துறை ஆய்வாளர் சுமதி, உதவி பொறியாளர் ஹவ்வா ஷகிரா, வட்டார வளர்ச்சி அலுவலர் கிரேட் சர்சில் ஜெபராஜ், மீன்துறை ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் 6ம் தேதி மகளிர் தின விழா விளையாட்டுப் போட்டி
வியாழன் 4, மார்ச் 2021 4:31:01 PM (IST)

கல்வி நிலையங்களை பிரசார இடமாக மாற்றிய ராகுல் மீது நடவடிக்கை: அா்ஜூன் சம்பத் கோரிக்கை!
வியாழன் 4, மார்ச் 2021 4:26:09 PM (IST)

திருநங்கை மர்ம சாவு : போலீசார் தீவிர விசாரணை
வியாழன் 4, மார்ச் 2021 4:07:39 PM (IST)

கணியில் தமிழ் சிறப்பு இடம் பெற காரணமானவர் : கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு வைகோ இரங்கல்!!
வியாழன் 4, மார்ச் 2021 3:41:58 PM (IST)

நெல்லை அருகே நிலத்தரகர் கொலையில் 4 பேர் கைது
வியாழன் 4, மார்ச் 2021 8:43:33 AM (IST)

முண்டந்துறை வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை
வியாழன் 4, மார்ச் 2021 8:42:06 AM (IST)
