» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கனமழையால் பயிர் சேத பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு

சனி 23, ஜனவரி 2021 3:46:23 PM (IST)மானூர் வட்டாரத்தில் மழையினால் பாதிக்கப்பட்டஉளுந்து மற்றும் பயறு வகை பயிர்களை மாவட்டஆட்சித் தலைவர் வே.விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டாரத்தில் நடப்பு ஜனவரி மாதம் அதிகம் மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் ஆகியோர் அழகியபாண்டியபுரம், சுப்பையாபுரம் மற்றும் கூவாச்சிபட்டி கிராமங்களில் உள்ள பயிர் சேதங்களை நேரில் பார்வையிட்டு பயிரில் விதைகள் முளைத்திருப்பதையும், மணிகள் சேதமடைந்திருப்பதையும் விவசாயிகளிடம் சேத விபரம் குறித்தும் கேட்டறிந்தார்கள்.

வன்னிகோனந்தல் கிராமத்தில் திருந்திய பாரத பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உளுந்து பயிரில் பயிர் அறுவடை பரிசோதனை தொடர்பான முறைகளை நேரடி ஆய்வு செய்தார்கள்.
மானூர் வட்டாரத்தில் மழையினால் பாதிப்புக்குள்ளான பயறு வகை பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்களுக்கான உரிய கணக்கீட்டு பணி வருவாய் துறை,வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக் கலைத் துறை ஆகியோர் மூலம் நடைபெற்று வருகிறது எனவும் கணக்கெடுப்பு பணியினை விரைவில் முடித்திடவும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்தார்கள்.

ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திரபாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சு.அசோக்குமார் ,வேளாண்மை துணை இயக்குநர் முனைவர். சுந்தர் டேனியல் பாலஸ், புள்ளியியல் துறை துணை இயக்குநர் சூரியகலா, மானூர் வட்டாட்சியர்;, வேளாண்மை உதவி இயக்குநர், மானூர் ஏஞ்சலின் கிரேபா, மானூர் வட்டார தோட்டக்லை உதவி இயக்குநர் சண்முகநாதன் மற்றும் வருவாய் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவன பிரதிநிதி ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory