» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரன்கோவிலில் 2 காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா

சனி 23, ஜனவரி 2021 4:16:22 PM (IST)சங்கரன்கோவிலில் இரண்டு புதிய காவல் நிலைய கட்டிடங்களின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உட்கோட்டத்திலுள்ள சங்கரன்கோவில் நகர் காவல் நிலையம் மற்றும் சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் நிலையங்களுக்காக புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர்  காணொளி (Video Conference) மூலமாக திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் கலந்து கொண்டு குத்துவிளக்கு விளக்கு ஏற்றி புதிய காவல் நிலையங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம், காவல் ஆய்வாளர்கள் மீனாட்சி நாதன், மகேஸ்வரி,மங்கையர்க்கரசி,மார்டின் மற்றும் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory