» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் 20ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

புதன் 17, பிப்ரவரி 2021 5:08:40 PM (IST)

பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வருகிற 20ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், திருநெல்வேலி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.02.2021 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை புனித யோவான் கல்லூரி (St. John’s  College), பாளையங்கோட்டையில் வைத்து நடைபெற உள்ளது.

இத்தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.  இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுநர்கள் சுய தொழில் செய்வதற்கு ஏற்ப கடன் உதவிகள் வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது Resume கல்விசான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன்  வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9.00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். 

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள்  மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு 0462-2500103 என்ற தொலைபேசி அல்லது deo.vgtnv@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory