» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மொபட் மீது தனியார் பஸ் மோதல் : தொழிலதிபர் பலி
புதன் 17, பிப்ரவரி 2021 5:29:14 PM (IST)
வாசுதேவநல்லூர் அருகே மொபட் மீது தனியார் பஸ் மோதியதில் தொழிலதிபர் பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள வெள்ளான கோட்டையைச் சேர்ந்தவர் பாலையா மகன் குருசாமி (56). இவர் டீ கப் தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். இவர் மொபட்டில் வீட்டிலிருந்து கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தார். வாசுதேவநல்லூர் அருகே தென்காசி - மதுரை மெயின் ரோட்டில் சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மொபட் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குருசாமி புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்த காளிராஜ் (29 ) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காங்கிரஸ் சார்பில் ராதாபுரம், நான்குநேரி தொகுதிக்கு போட்டியிட வழக்கறிஞர் காமராஜ் விருப்ப மனு
வெள்ளி 5, மார்ச் 2021 5:51:34 PM (IST)

ஆற்றில் குளித்தபோது வலிப்பு ஏற்பட்டு ஒருவர் சாவு
வெள்ளி 5, மார்ச் 2021 5:48:10 PM (IST)

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி அவசியம்: தென்காசி ஆட்சியர்
வெள்ளி 5, மார்ச் 2021 5:46:58 PM (IST)

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் தென்காசி ஆட்சியர் சமீரன்!!
வெள்ளி 5, மார்ச் 2021 12:34:19 PM (IST)

பாளை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் 6ம் தேதி மகளிர் தின விழா விளையாட்டுப் போட்டி
வியாழன் 4, மார்ச் 2021 4:31:01 PM (IST)

கல்வி நிலையங்களை பிரசார இடமாக மாற்றிய ராகுல் மீது நடவடிக்கை: அா்ஜூன் சம்பத் கோரிக்கை!
வியாழன் 4, மார்ச் 2021 4:26:09 PM (IST)
