» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தனியார் விடுதியில் பெண் கழுத்தை அறுத்துக்கொலை : கள்ளக்காதலன் தற்கொலை முயற்சி

வியாழன் 18, பிப்ரவரி 2021 8:56:42 AM (IST)

கடையநல்லூரில் தனியார் விடுதியில் பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அவருடைய கள்ளக்காதலன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் பஸ்நிறுத்தம் அருகே தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதிக்கு நேற்று முன்தினம் இரவு 2 பேர் வந்தனர். கணவன்- மனைவி என்று கூறி அறை எடுத்து தங்கினர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களின் அறைக்கதவு திறக்கப்படவில்லை. கதவு வழியாக ரத்தக் கசிவுகள் வந்ததால், விடுதி ஊழியர்கள் இதுபற்றி கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், புளியங்குடி டிஎஸ்பி சுவாமிநாதன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், அமிர்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் ரத்தக்கறையுடன் கிடந்தது தெரியவந்தது. அவர்களில் பெண் ஒருவர் பிணமாக கிடந்ததும், மற்றொருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் பிணமாக கிடந்த பெண்ணின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சிவகிரி தாலுகா மேல கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த சந்தி வியாகப்பன் மகன் அந்தோணிராஜ் (45) என்பதும், ராயகிரி கிராமத்தை சேர்ந்த மாலா (35) என்பதும் தெரியவந்தது. அந்தோணிராஜ் கூலி தொழிலாளி ஆவார். ஏற்கனவே திருமணம் ஆன இவர்கள் இருவரும் கள்ளக்காதலர்கள் என்பதும் தெரியவந்தது. அந்தோணிராஜ் கூர்மையான கத்தியால் குளியலறையில் வைத்து மாலாவின் கழுத்தை அறுத்துள்ளார்.  இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். 

பின்னர் அந்தோணிராஜ் கத்தியால் தானும் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரியவந்தது. அறை எடுத்து தங்கிய இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்தோணிராஜ், மாலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். அந்தோணி ராஜ் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் சற்று குணமான பின்பு அவரிடம் விசாரணை நடத்தினால் தான் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் எனவும் போலீசார் தரிவித்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் விடுதியில் பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory