» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டூவிலர் ஷோரூமில் பயங்கர தீவிபத்து: ரூ.1 கோடி மதிப்பில் வாகனங்கள், பொருட்கள் எரிந்து சேதம்!

வியாழன் 18, பிப்ரவரி 2021 5:40:47 PM (IST)

சங்கரன்கோவிலில் இன்று காலையில் மோட்டார் சைக்கிள் ஷோ-ரூமில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமாகின.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்காபுரத்தை சேர்ந்தவர் கனகவேல் (40). இவர் சங்கரன்கோவில்- திருவேங்கடம் சாலையில் பிரபல கம்பெனியின் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் வைத்துள்ளார். சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள மிகப்பெரிய ஷோருமான இங்கு 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.

2 தளங்கள் கொண்ட ஷோரூமில் அடித்தளத்தில் மோட்டார் சைக்கிள்கள் பழுது மற்றும் பின்புறத்தில் சர்வீஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் விற்பனை மையத்தை ஊழியர்கள் அடைத்து விட்டு சென்றுள்ளனர். இன்று காலை 6.30 மணி அளவில் அப்பகுதியில் வந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் விற்பனை மையத்தின் உள்ளே இருந்து புகை வருவதை பார்த்துள்ளனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு டவுன் போலீசார், ஷோரூம் உரிமையாளர் கனகவேல் ஆகியோர் அங்கு வந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

அதனைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கவிதா நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பயங்கர தீ விபத்தில் ஷோரூமில் தரைதளத்தில் நிறுத்தி இருந்த அனைத்து மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாயின. மேலும் முன்புறம் நிறுத்தி இருந்த சில புதிய மோட்டார் சைக்கிள்களும் பகுதி அளவு சேதம் அடைந்தது. சர்வீசுக்கு விடப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து நாசமானது. தரைதளத்தில் இருந்த வாகன உதிரி பாகங்கள் அறை முற்றிலுமாக எரிந்தது. 

மேலும் ஷோரூமில் இருந்த கம்யூட்டர்கள், அலங்கார விளக்குகள், சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளிட்டவையும் தீயில் எரிந்தன. தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின. மேல் தளத்தில் தீ பரவுவதற்குள் தீயணைப்பு துறையினர் கட்டுப்படுத்தியதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தப்பின. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory