» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்

வெள்ளி 19, பிப்ரவரி 2021 8:52:40 AM (IST)தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருவிழா வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் அபிஷேக தீபாராதனை, மாலையில் மண்டகப்படி பூஜை மற்றும் சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறுகின்றன. விழாவின் 9-ம் நாளான வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory