» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மக்களாகிய நாம்தான் வாரிசு: முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பேச்சு

வெள்ளி 19, பிப்ரவரி 2021 10:18:40 AM (IST)தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இளைஞர் பாசறை நிர்வாகிகள் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பேசினார்.
 
அதிமுக இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் ஆலங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.  இந்தகூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி  பேசியதாவது: - இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற ரீதியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை இரண்டும் வெற்றி வாய்ப்பிற்கு காரணமாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எடுத்துரைத்து எதிரிகளை விஞ்ஞான முறைப்படி முறியடிக்க வேண்டும். ஸ்டாலின் பொதுக் கூட்டங்களில் அரசு எதுவும் செய்ய வில்லை எனக் கூறி வருகிறார். 

அதனை முறியடிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் வியூகம் அமைத்துச் செயல்பட வேண்டும்.  இளைஞர்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் தொகுதிக்கு 7,500 பேர் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மற்றும் இளைஞர் பாசறையினர் உள்ளனர். மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிமுகவில்தான் அதிக அளவில் இளைஞர்கள் உள்ளனர்.  தென் மாவட்டங்களைத் தொழில்வளம் மிக்க மாவட்டமாக மாற்ற அரசுத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அதற்கு தொழில் மூதலீட்டாளர்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாதிக்கவும், சாதனைகள் புரியவும் பிறந்தவர்கள் இளைஞர்கள். சாதாரண தொண்டன் உயர்ந்த நிலைக்கு வரக்கூடிய ஒரே இயக்கம் அதிமுகதான். 

நீங்கள் கடுமையாக உழைத்தால் என் நிலைக்குக் கூட வர இயலும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மக்களாகிய நாம்தான் வாரிசு. இந்த இயக்கத்தில் இருப்பதை நாம் பெருமையாக எண்ணி, உழைக்க வேண்டும்.   மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எந்த மக்கள் பணிகளும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டி வருகிறார். ஏமாற்று வேலைகள் செய்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என பகல் கனவு காணுகிறார். இதை நாம் முறியடிக்க வேண்டும். 2019 ஜனவரியில் தொழில் முனைவோர் மாநாட்டில் 304 தொழில்கள் வருவதற்கு அடித்தளம் அமைத்தோம். இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கரோனா காலகட்டத்தில் இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம்  தமிழ்நாடுதான். 60 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து 73 தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுத்தோம். இதன் மூலம் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. 

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க நினைக்கும் தொழில் முனைவோருக்கு 50 சதவீத மானியத்தில் இடம் வழங்கப்படும். தொழில் முதலீட்டுக்கும் மானியம் அளிக்கப்படும். அதன் மூலம் உங்கள் பகுதியில் புதிய தொழிலைத் தொடங்கி வேலை வாய்ப்பைப் பெருக்குவதுதான் எனது நோக்கம் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி எம் ராஜலட்சுமி, அதிமுக மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

தமிழன்Feb 20, 2021 - 09:31:50 PM | Posted IP 162.1*****

MGR மலையாளி , ஜெயலலிதா கன்னட நடிகை நம் நாட்டுக்கு தேவை இல்லாத ஆணி .

tamilanFeb 19, 2021 - 06:06:04 PM | Posted IP 108.1*****

முதல்வர் எடப்பாடி அவர்கள் மிகவும் சாதாரண முதல்வராகவும் சிறப்பானவராகவும் மற்றும் திரு.சி.விஜய பாஸ்கர் , செங்கோட்டையன் ,ஜெயக்குமார் , கடம்பூர் ராஜு இவர்கள் இந்த அரசின் சிறந்த அமைச்சர்களாக மக்களால் பாராட்டப்படுகிறார்கள் .

MURUGANFeb 19, 2021 - 03:34:52 PM | Posted IP 162.1*****

Sir, Appreciate your administration and best ruling in Tamilnadu. We wish you to win the 2021 assembly election and will be elect as a Chief Minister also the wishes for the best active ministers team like Mr.Vijaya baskar / Mr.Kadambur Raju / Mr.C.V.Shanmugam, Mr.Rajendra Balaji etc.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory