» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தி.மு.க. நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

வெள்ளி 19, பிப்ரவரி 2021 10:52:51 AM (IST)

முக்கூடல் அருகே தி.மு.க. தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (45). இவர் தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார்.நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் தனது கோழிப்பண்ணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்மநபர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த பலத்த காயம் அடை்நத அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். 

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்லத்துரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை மற்றும் கட்சி நிர்வாகிகள் முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. மேலும், அங்கு மாவட்ட எஸ்பி மணிவண்ணன், டிஎஸ்பி பிரதீப் மற்றும் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

முக்கூடல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி யார்? எதற்காக செல்லத்துரையை படுகொலை செய்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory