» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பாட்டி, பேத்தி கடத்தி கொலை - தென்காசியில் பயங்கரம்

சனி 20, பிப்ரவரி 2021 5:49:40 PM (IST)

தென்காசியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக பாட்டி மற்றும் பேத்தியை கடத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி கீழப்புலியூரி், உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உச்சினிமாகாளி மனைவி கோமதி அம்மாள் (55). இவர்களது மகள் சீதா என்ற சுப்புலட்சுமி. இவருக்கும் தென்காசி அருகே உள்ள கடப்போ கத்தி பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகள் உத்ரா என்ற சாக்ஷி (1½). முருகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் அவரது மனைவி சுப்புலட்சுமி தனது மகளுடன் தாய் வீடான கடப்போ கத்தியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் கோமதி மற்றும் அவரது பேத்தி சாக்ஷி ஆகியோர் காணவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் முருகன் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது தனது குழந்தை மற்றும் மாமியார் மாயமானது குறித்து தென்காசி போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோமதி, சாக்ஷியை தேடி வந்தனர். இது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

அப்போது கோமதி அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கடன் கொடுத்ததாகவும், அதனை அவர் திருப்பி கேட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் கோமதி பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் கோமதி மற்றும் அவரது பேத்தியை கடத்தி கொலை செய்ததாக தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பாட்டி மற்றும் பேத்தியின் உடல்களை சாக்கு மூட்டையில் கட்டி தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையை அடுத்த முத்துமாலைபுரத்தில் காட்டு பகுதியில் வீசியதும் தெரிய வந்தது.

இதையடுத்து இன்று காலை அங்கு சென்ற குற்றாலம் போலீசார் அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் கிடந்த 2 பேரின் உடலையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல், குற்றாலம் இன்ஸ் பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் நெல்லை தடயவியல் துறை நிபுணர்களும் அங்கு தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக போலீசார் பெண் உள்ளிட்ட 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory