» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நீங்கள் எங்களுக்குத் துணையாக இருங்கள்! நாங்கள் உங்களுக்கு உயிராக இருப்போம்! - சீமான் நெகிழ்ச்சி

திங்கள் 22, பிப்ரவரி 2021 10:37:10 AM (IST)



நீங்கள் எங்களுக்குத் துணையாக இருங்கள்! நாங்கள் உங்களுக்கு உயிராக இருப்போம் என தென்காசியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் மாநாட்டில் சீமான் பேசினார்.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் 18வது மாநில மாநாடு 20.02.2021 அன்று தென்காசி மாவட்டம், குற்றாலம் காசிமேஜர்புரத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக மாலை 04 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, மறைந்த தமிழ்ப் பண்பாட்டு பேராசான் முனைவர் தொ.பரமசிவன் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மாநாடு நிறைவுப் பேருரையாற்றினார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக சீமான் அவர்களுக்கு கைத்தறி ஆடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

சராசரி இளைஞனாக பொழுதுபோக்குகளில் நாட்டம் கொண்டிருந்த என்னுள் மக்கள் நலன் சார்ந்த சிந்தனையை விதைத்து சராசரி எனது கல்லூரி பேராசிரியரும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வறிஞர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்ததில் பெருமையடைகிறேன். இதழியல் துறையின் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்றுள்ள இவ்வரலாற்றுப் பெருநிகழ்வில் பங்கேற்றது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) எங்களுக்குத் துணையாக இருங்கள்! நாங்கள் உங்களுக்கு உயிராக இருப்போம்! மக்களின் நலனுக்காக இனி வருங்காலங்களிலும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு சீமான் அவர்கள் உரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory