» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரன்கோவில் 7,038 பயனாளிகளுக்கு ரூ.7.50 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்

திங்கள் 22, பிப்ரவரி 2021 12:03:32 PM (IST)



சங்கரன்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் 7,038 பயனாளிகளுக்கு ரூ.7,50,62,804 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்.

சங்கரன்கோவில் கோகுலம் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி. எஸ்.சமீரன் தலைமையி்ல், சமூகநலத்துறை மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 527 ஏழை பெண்களுக்கு ரூ.2.22 கோடி நிதியுதவியுடன் ரூ.2.03 கோடி மதிப்பிலான 4.2 கிலோ கிராம் தங்கம் ஆகியவற்றை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பயனாளிகளுக்கு வழங்கினார். விழாவிற்கு வகித்தார். 

அதைதொடர்ந்து, சங்கரன்கோவில் ஏ.வி.ஆர்.எம் திருமண மண்டபத்தில் வருவாய்துறை மூலம் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைபட்டாக்களும், பல்வேறு அரசுத்துறைகள் மூலமாக அரசு நலத்திடட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மகளிர் திட்ட இயக்குநர் விஜயலட்சுமி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, தனித்துணை ஆட்சியர் ஷீலா (சமூகபாதுகாப்பு திட்டம்), சமூகநலத்துறை அலுவலர் சரஸ்வதி, மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர் சாந்தி குளோரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory