» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உதயநிதியைப் பற்றி நான் பேசினால், ஸ்டாலினுக்கு பிபி அதிகமாகிறது: நெல்லையில் அமித்ஷா பேச்சு
சனி 3, ஏப்ரல் 2021 5:09:57 PM (IST)
உதயநிதியைப் பற்றி நான் பேசினால், ஸ்டாலினுக்கு பிபி அதிகமாகிறது என நெல்லையில் பிரசாரம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 7 மணிக்கு முடிவடைகிறது. தேர்தல் பிரசாரத்துக்கும் இன்றும், நாளை மட்டுமே எஞ்சியுள்ளதால் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் அம்பை அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளர் ஜெரால்டு, திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்; தாமிரபரணி நதியுள்ள, நெல்லையப்பர் பூமிக்கு வந்ததில் பெருமையடைகிறேன். தமிழகத்தில் 10 ஆண்டுகளாக சாமானிய மக்களின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் கடனை ரத்து செய்து சாமானியர்களின் கனவை நிறைவேற்றியுள்ளார் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் "உதயநிதியைப் பற்றி நான் பேசினால், ஸ்டாலினுக்கு பிபி (ரத்த அழுத்தம்) அதிகமாகிறது. . பின்னர் அவர் தனது அமைதியை இழந்து யாரைப் பற்றியாவது பேசுகிறார். இறந்த தலைவர்கள் குறித்து ஸ்டாலின் விமர்சிக்கிறார். அதிமுக - பாஜக தமிழகத்திற்காக பாடுபடுகிறது, திமுக - காங்கிரஸ் குடும்பத்திற்காக பாடுபடுகிறது. மாநிலத்தைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? அல்லது மகனை முதல்வர் ஆக்க நினைக்கும் நபருக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? என்று தமிழக மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
பாஜக தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்தது. கட்சியின் இந்த மாநிலத் தலைவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான். பொருளாதாரத்தில் நலிந்த உயர்வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை மோடி கொண்டுவந்தார். தமிழக கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி விவசாயிகள், வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள், தமிழக மீனவர்களை பற்றி சிந்திக்கிறார். என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலருவி சிறப்பு ரயில் பகுதியாக ரத்து: தெற்கு ரயில்வே
வியாழன் 15, ஏப்ரல் 2021 5:50:10 PM (IST)

வெடிகுண்டு பிரிவில் பணியாற்றி இறந்த மோப்ப நாய் பிராவோக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை!
வியாழன் 15, ஏப்ரல் 2021 12:25:25 PM (IST)

பாதாள சாக்கடை குழியில் பைக்குடன் விழுந்த வாலிபர் : நெல்லை டவுனில் பரபரப்பு
வியாழன் 15, ஏப்ரல் 2021 9:04:18 AM (IST)

பாபநாசம் சிவன் கோயிலில் சித்திரை விஷு திருவிழா : பக்தர்களுக்கு தடை; வெறிச்சோடிய தாமிரபரணி!!
புதன் 14, ஏப்ரல் 2021 12:48:36 PM (IST)

முக கவசம் அணியாத 591 பேருக்கு ரூ.123 லட்சம் அபராதம்
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:24:58 PM (IST)

பாளை. அரசு சித்தா மருத்துவமனையில் கரோனா சிகிச்சை ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:19:19 PM (IST)
