» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகள் தயார் - ஆட்சியர் தகவல்!!

திங்கள் 5, ஏப்ரல் 2021 4:50:29 PM (IST)

தென்காசி மாவட்டம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் 6,54,985 ஆண் வாக்காளர்களும், 6,81,936 பெண் வாக்காளர்களும், 35 மற்றவர்களும் என மொத்தம் 13,36,956 வாக்காளர்கள் வாக்களிக்க 1,884 வாக்குப்பதிவு மையங்கள் தயார் நிலையில் உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் 06.04.2021 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. வாக்குப்பதிவு காலை 07.00 மணிக்கு துவங்கி இரவு 07.00 மணி வரை நடைபெறுகின்றன.

219-சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,22,906 ஆண் வாக்காளர்களும், 1,30,399 பெண் வாக்காளர்களும், 5 மற்றவர்களும் என மொத்த வாக்காளர்கள் 2,53,310 ஆகும். இத்தொகுதியில் 365 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இதற்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவிற்கான தயார்நிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

220-வாசுதேவநல்லூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 1,18,547 ஆண் வாக்காளர்களும், 1,22,561 பெண் வாக்காளர்களும், 01 மற்றவர்களும் என மொத்த வாக்காளர்கள் 2,41,109 ஆகும். இத்தொகுதியில் 336 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இதற்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவிற்கான தயார்நிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

221-கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1,43,956 ஆண் வாக்காளர்களும், 1,45,979 பெண் வாக்காளர்களும், 05 மற்றவர்களும் என மொத்த வாக்காளர்கள் 2,89,940 ஆகும். இத்தொகுதியில் 411 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இதற்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவிற்கான தயார்நிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

222-தென்காசி சட்டமன்ற தொகுதியில் 1,43,298 ஆண் வாக்காளர்களும், 1,48,853 பெண் வாக்காளர்களும், 17 மற்றவர்களும் என மொத்த வாக்காளர்கள் 2,92,168 ஆகும். இத்தொகுதியில் 408 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இதற்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவிற்கான தயார்நிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

223-ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 1,26,278 ஆண் வாக்காளர்களும், 1,34,144 பெண் வாக்காளர்களும், 07 மற்றவர்களும் என மொத்த வாக்காளர்கள் 2,60,429 ஆகும். இத்தொகுதியில் 364 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இதற்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவிற்கான தயார்நிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆகமொத்தம் ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆண் வாக்காளர்கள் 6,54,985 பெண் வாக்காளர்கள் 6,81,936 மற்றவர்கள் 35 என மொத்த வாக்களர்கள் 13,36,956 வாக்களிக்க உள்ளனர். மொத்த 1884 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிச்செல்ல 147 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஜி.விஜிலி மூலம் சங்கரன்கோவில்(தனி)-3 புகார்களும், கடையநல்லூர்-3 புகார்களும், வாசுதேவநல்லூர்-3 புகார்களும், தென்காசி-6 புகார்களும், ஆலங்கும் - 2 புகார்களும் என மொத்தம் 17 புகார்கள் வரபெற்றுள்ளன. காவல்துறை, பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு ஆகியோர் ஆய்வுமேற்கொள்ளும் போது (04.04.2021-வரை) 58 நபர்கள் உரிய ஆவணங்கள் இன்றி கண்டறியப்பட்டு ரூ.1,97,19,520 கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்து 30 நபர்கள் ரூ.88,73,733 திரும்பப்பெற்றுக்கொண்டனர். மீதம் ரூ.1,08,45,787 கருவூலத்தில் உள்ளது.

மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலுள்ள 1,884 வாக்குப்பதிவு மையங்களுக்கும் வாக்குப்பதிவிற்கு நாளிற்கு முதல்நாள் நேற்று மாலையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேரும். ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் முழுமையாக கண்காணிக்கப்படுவதுடன் துணை இராணுவப்படையினரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருவார்கள். மாவட்டத்தில் 143 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு கண்காணிக்க 143 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்குப்பதிவு மையங்களுக்கு 1,584 காவல்துறையினர், 168 துணை இராணுவ வீரர்கள், 250 ஊர்க்காவல்படை மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து 250 காவல்துறையினரும் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப்பணியில் இருந்து வருவருகிறார்கள். கூடுதலாக 1,025. வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

தேர்தல் பணிக்காக வருவாய்த்துறை 834 பணியாளர்கள், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளுடன் 9,044 பணியாளர்கள், பொது சுகாதாரத்துறையின் மூலம் தன்னார்வ அமைப்புகளிலிருந்து 3,768 நபர்களும் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ளார்கள்.

தற்பொழுது கோவிட்-19 காலத்தை கருத்திற்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, வாக்காளர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து முகக்கவசம் மற்றும் கையுறை, கிருமிநாசினி மருந்துகள் உட்பட 11 வகையான பொருட்கள் கொண்ட தொகுப்பு சுகாதாரத்துறையின் மூலம் அனுப்பி வைத்தததுடன், தன்னார்வ அமைப்பிலுள்ள செவிலியர் பயிற்சி பெற்ற ஒருவர் மூலம் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கு வரும் வாக்காளர்களின் உடல்நிலை வெப்பப்பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க அறிவுறுத்தப்படுவார்கள்.

ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக சக்கரநாற்காலிகள் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவதுடன் ஒவ்வொரு மையத்திலும் தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வாக்களிக்க சக்கரநாற்காலியை இயக்கி உதவிபுரிவார். ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் அனைத்துவகையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் தயார்நிலையில் இருப்பதுடன் காவல்துறையின் மூலம் முழுமையான கண்காணிப்புப்பணியில் இருந்து வருவார்கள்.


இதேபோல் ஐந்து சட்டமன்ற தொகுதிக்கும் 147 மண்டல அலுவலர்கள் பணி மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மண்டல அலுவலரும் 10 முதல் 15 வாக்குச்சாவடி வரை கண்காணிப்புப்பணியில் இருந்து வருவார்கள். வாக்குப்பதிவு நாளன்று மின்னணு வாக்குப்பதிவ இயந்திரம் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யும் அளவிற்கு உரிய தொழில்நுட்ப வல்லுநர் குழுவுடன் கண்காணிப்பில் இருந்து வருவார்கள்.

அதேபோல் காவல்துறையில் துணை இராணுவமும் வாக்குப்பதிவு நாளன்று முழுமையாக கண்காணிப்பில் இருந்து வரும். பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமாக வாக்களித்து செல்லலாம். வாக்குப்பதிவிற்கான அனைத்துப்பணிகளும் தயார்நிலையில் உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory