» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல்

புதன் 7, ஏப்ரல் 2021 5:04:50 PM (IST)தென்காசி மாவட்டத்தின் 5 சட்டமன்ற தொகுதிகளின்; மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யூஎஸ்பி கல்லூரியில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைத்து அறைகள் சீல் வைக்கப்பட்டன.

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, ஆலங்குளம்,கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக தனி வாகனங்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தென்காசி கொடிக்குறிச்சி யூஎஸ்பி கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று காலை வரை இப்பணி நடைபெற்றது.

அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் வந்த பின்னர் 5 தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு அவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர் 5 அறைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு அறைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது.இப்பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தென்காசி, கடையநல்லூர் தொகுதிகளின் பொதுப்; பார்வையாளர்கள் பிரகாஷ்; பிந்து, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளின் பொதுப் பார்வையாளர்கள் ராஜூ நாராயணசுவாமி, ஆலங்குளம் தொகுதி பொதுப் பார்வையாளர் வேதபதி மிஸ்ரா ஆகியோர் தலைமையில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் யூஎஸ்பி கல்லூரியைச் சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் துணை இராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory