» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடும்பத் தகராறில் மனைவியை குத்திக் கொன்ற கணவர் - காப்பாற்ற முயன்ற பெண் காயம்!!

வியாழன் 8, ஏப்ரல் 2021 11:59:19 AM (IST)

தென்காசி அருகே குடும்பத் தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.  காப்பாற்ற முயன்ற பெண்ணும் கத்திக்குத்தில் காயம் அடைந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :  தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி மல்லிகா (22), கேபிள் டிவி அலுவலகத்தில் வேலைபார்த்து வந்தார்.  கணவன் - மனைவி இடையே குடுபத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் குடும்பத் தகராறில் ராஜகோபால் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க முயன்ற  பக்கத்து வீட்டு பெண் மாரியம்மாள் (42) என்பவரும் காயம் அடைந்தார். இருவரும் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா உயிரிழந்தார்ள்ளனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள ராஜகோபாலை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory