» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு இஸ்ரோவில் இருந்து 5½டன் ஆக்சிஜன் அனுப்பி வைப்பு

வியாழன் 13, மே 2021 10:22:22 AM (IST)

இஸ்ரோவில் இருந்து டேங்கர் லாரி மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 5½ டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தால் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால், நாடு முழுவதும் கரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடாக உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் கரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மருத்துவ கழகத்திற்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் ஆக்சிஜன் எந்த பகுதிக்கு அதிகமாக தேவை? என்பதை அறிந்து அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதன்படி நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு டேங்கர் லாரியில் 5½ டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory