» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கனிமொழி எம்.பி. ஆய்வு

வெள்ளி 14, மே 2021 8:01:33 AM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு குறித்து கனிமொழி எம்பி மற்றும் அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆகியோா் நேற்று ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதியில், சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இம் மாவட்டத்துக்கான கரோனா தடுப்புப் பணிகள் கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த் முன்னிலை வகித்தாா்.

சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் முன்னிலையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தாா். 100 படுக்கை வசதிகள் கொண்ட சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தில் கபசுரக் குடிநீா் உள்ளிட்ட பல்வேறு சித்த மருந்துகளுடன் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிமொழி எம்.பி.யும், அமைச்சா் பெ. கீதாஜீவனும் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கரோனா தடுப்புப் பணிகள், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள், ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரேவதி பாலனிடம் அவா்கள் கேட்டறிந்தனா்.


மக்கள் கருத்து

இப்போ புரியுதுமே 15, 2021 - 11:09:54 AM | Posted IP 108.1*****

ஸ்டெர்லைட் ல OXYGEN உற்பத்தி செய்து அதிகரிக்க வாழ்த்துக்கள்

kumarமே 14, 2021 - 01:35:41 PM | Posted IP 162.1*****

coronaval pathikka pattavargaluku tharamana sigichai arasu maruthuvamanayil alikka erpaduseyyungal...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory