» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கரும்புத் தோட்டத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேருக்கு ரூ.2லட்சம் அபராதம்

வெள்ளி 14, மே 2021 4:40:22 PM (IST)




சிவகிரி அருகே கரும்புத் தோட்டத்தில் திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேருக்கு வனத்துறையினர் ரூ.2லட்சம் அபராதம் விதித்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி வடக்குப்பிரிவு, தேவிப்பட்டிணம் பீட் பகுதியில் தவசி  என்பவரது  மகன் குருசாமிக்குச் சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. இக்கரும்புத்தோட்டத்தில் திருட்டுத்தனமாக மின்சாரவேலி அமைத்து காட்டுப்பன்றியை சிலர் வேட்டையாடினர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிவகிரி ரேஞ்சர் டி.சுரேஷ் தலைமையில், சிவகிரி வடக்குப்பிரிவு வனவர் முருகன், தெற்குப்பிரிவு வனவர் அஜித்குமார், வனக்காப்பாளர்கள் திருவேட்;டை, ராஜீ, சுதாகர், இமானுவேல், பாரதிகண்ணன், வனக்காவலர் அருண்குமாhர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆனந்தன், சரவணன், மாரியப்பன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தனித்தனிக்குழுவினராகச் சென்று தேடினர்.

அப்போது குருசாமி கரும்புத்தோட்டத்தில் மின்சாரவேலி அமைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய தேவிப்பட்டிணம் மாரிம்மன்கோவில்தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் தங்கமலை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மருள்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் ரவி (45), ஸ்ரீவில்லிபுத்தூர் தட்டாகுளம்பட்டியைச் சேர்ந்த அழகர் மகன் கருப்பசாமி (45), இராயகிரி சரவணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கோவில்பிள்ளை மகன் மாடசாமி (58) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் வனத்துறையினர் காட்டுப்பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம்விதித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory