» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இஸ்ரோ குழு ஆய்வு

சனி 15, மே 2021 7:42:17 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இஸ்ரோ குழு நேரில் ஆய்வு செய்தது. 

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 12ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதற்கிடையே, ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாளிலேயே திடீரென குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு இயக்கப்படாததே இதற்கு காரணம் என்றும், பழுதை சரி செய்யும் பணியில் ஸ்டொ்லைட் ஆலையின் தொழில்நுட்ப வல்லுநா் குழு  ஈடுபட்டது. இந்நிலையில், ஸ்டொ்லைட் தொழில்நுட்ப குழுவினருடன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சோ்ந்த தொழிநுட்ப குழுவினரும் பழுதை சரி செய்யும் பணியில் இன்று ஈடுபட்டனா்.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை விரைவில் தொடங்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து இஸ்ரோ குழு நேரில் ஆய்வு செய்தது. தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய இஸ்ரோ நிபுணர்கள் குழு சில ஆலோசனைகளை வழங்கினர். இஸ்ரோ குழு வழங்கிய ஆலோசனைகளால் கோளாறை சரி செய்வதற்கு உதவிகரமாக இருந்தது எனவும் ஸ்டெர்லைட்  நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து

adminமே 15, 2021 - 07:46:18 PM | Posted IP 162.1*****

isro the mass

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory