» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

வெள்ளி 11, ஜூன் 2021 4:01:25 PM (IST)



தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர்  ஜி.எஸ்.சமீரன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அனைத்துத் துறை அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் ஆட்சியர்  தெரிவித்ததாவது: குழந்தைகள் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த ஆண்டு தோறும் குழந்தைகள் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 14 வயத்திற்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களை வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் அனைத்துத்துறை அலுவலர்கள் முன்னிலையில் இன்று குழந்தைகள் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சியர்  ஜி.எஸ்.சமீரன் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory