» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கரோனா 3வது அலை வந்தாலும் எதிர்க்கொள்ள தயார்: நெல்லையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

வெள்ளி 11, ஜூன் 2021 5:33:56 PM (IST)



பாளையங்கோட்டை காந்திமதியம்மன் பள்ளியில், புதிதாக உருவாக்கப்பட்ட 180 ஆக்சிஜன் படுக்கைகள் வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தினை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காந்திமதியம்மன் பள்ளியில், உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 180 ஆக்சிஜன் படுக்கைகள் வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையத்தினை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தலைமையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, சா.ஞானதிரவியம் எம்.பி, மு.அப்துல் வகாப். எம்.எல்.ஏ , முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் , முன்னாள் எம்.எல்.ஏ ஏ.எல்.எஸ் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் கரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளை மிக சிறப்பாக கையாண்டுள்ளதாலும், மாவட்ட நிர்வாகத்தின் அயராத உழைப்பினாலும் தற்போது நெல்லை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று கடந்த மாதங்களில் 30 சதவீதமாக இருந்தது. தற்போது 10 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. 

இந்த தொற்று சதவீதம் குறைவாக இருக்கக் கூடிய காரணத்தினால் இப்போது கரோனா நோயாளிகளுடைய எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் வரும் காலங்களில் எந்த ஒரு நோய் தொற்று சூழல்நிலையையும் எதிர்கொண்டு, பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து காப்பதற்கும், தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியை பொறுத்தமட்டில் தற்போது அமைக்கப்பட்டுள்ள காந்திமதியம்மன் பள்ளியில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய மொத்தம் 415 படுக்கைகள் கொண்ட கரோனா பராமரிப்பு சிகிச்சை மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதைப்போன்று அவசர மருத்துவ சிகிச்சை பெற வருபவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனிதனியாக மருத்துவ உபகரணங்களுடன் கூடிய படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அரசுப்பொறியியல் கல்லூரியில் 210 படுக்கைகள், சித்த மருத்துவ கல்லூரியில் 100 படுக்கைகள் என மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 825 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. திருநெல்வெலி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில, குறிப்பாக தருவையில் இருக்க கூடிய பாலிடெக்னிக் கல்லூரி, பத்தமடை சிவனாந்தா ஆசிரம மருத்துவமனை, மூக்கூடலில் உள்ள பீடித்தொழிலாளர்கள் மருத்துவமனை, சேரன்மகாதேவி ஸ்கேடு பொறியியல் கல்லூரி, வள்ளியூர் யூனிவர்செல் பொறியியல் கல்லூரி, திசையன்விளை புனித அந்தோணியார் பள்ளி என்று சுற்றுப்புற பகுதிகளில் 980 படுக்கைகள் வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

இது தவிர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள,; அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 2,711 படுக்கைகள் ஒட்டுமொத்தமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளது. தொற்று நோய் பொறுத்தவரையில் எல்லாவற்றையும் சமாளிக்க கூடிய நிலையை, நமது மாவட்டம் நிர்வாகம் உருவாக்கியுள்ளது. பெருந்தொற்று காலத்திலும் சிறப்பான பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், பல்வேறு துறையில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாகவும் கரோனா நோய் தொற்று அளவு வெகுவாக குறைந்துள்ளது.

இந்நேரத்தில் மாவட்ட நிர்வாகத்தை வெகுவாக பாராட்டுகின்றேன். ஆரம்ப கட்டத்தில் ஆக்சிஜன் தேவை என்பது அதிகமாக இருந்தது. தற்போது நெல்லை மாவட்டத்தில் 438 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் தயார் நிலையில் உள்ளது. கூடங்குளம் அரசு மருத்துவமனையில் 720 (CUBIC METER) திறன் கொண்ட ஆக்சிஜன் தயாரிக்கும் நிலையம் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் நாளொன்றுக்கு 103 சிலிண்டர்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

மானூர் வட்டம் சேதுராயன் புதூரில் AIR SUPPLIERS  நிறுவனத்தின் மூலம் நாளொன்றுக்கு 240 (CUBIC METER) ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள கீதா எண்டர்பிரைசஸ் மூலம் நாளொன்றுக்கு 1680 (CUBIC METER) ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலை பராமரிக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதன்மூலம் நாளொன்றுக்கு 240 சிலிண்டர்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த இரண்டு நிறுவனங்களும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த மூன்று ஆலைகளின் மூலம் மொத்தம் 4800 (CUBIC METER) ஆக்சிஜன் நாளொன்றிற்கு 693 சிலிண்டர்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த மூன்று ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேவையான பராமரிப்பு மற்றும் உதிரி உபகரணங்களை வெளிமாநிலங்களிலிருந்து விரைவாக வரவழைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த மூன்று ஆலைகளிலும் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும். 3வது அலை கரோனா தொற்று பரவல் தொடர்ந்தாலும் மாவட்ட நிர்வாகம் அதை எதிர்க்கொள்ள தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், திருநெல்வேலி சார் ஆட்சியர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிசந்திரன், இணை இயக்குநர் சுகாதார பணிகள் வரதராஜன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷாராணி சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தனிகாசலம், பாளையங்கோட்டை வட்டாட்சியர் செல்வன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory