» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மருந்தகங்களில் சிகிச்சை அளித்தால் உரிமம் ரத்து : தென்காசி ஆட்சியர் எச்சரிக்கை

சனி 12, ஜூன் 2021 11:29:24 AM (IST)



மருந்தகங்களில் மருத்துவர்களின் பெயரைக் கூறி சிகிச்சை அளித்தால் மருந்தக உரிமம் ரத்து செய்யப்படும் என தென்காசி  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தனியார் மருந்தகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்  தலைமையில் நடைபெற்றது. பின்னர் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்    கடைபிடிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக மருந்தக உரிமையாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் காய்ச்சல் தொடர்பான மருந்துகளை நோயாளிகளிடம் விநியோகிக்கக்கூடாது. காய்ச்சல் தொடர்பாக வரும் நோயாளிகளின் தகவல்களை சுகாதாரத்துறை அலுவலகங் களில் தெரிவிக்க வேண்டும். மருந்து வாங்க வரும் நோயாளிகளின் காய்ச்சல் அறிகுறி ஏதேனும் தென்பட்டால் ஆக்ஸிஜன் அளவை அறிந்து கொள்ளும் வகையில் பல்ஸ் ஆக்ஸியோ கருவியினை இலவசமாக வைத்து ஆக்ஸிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும்.

காய்ச்சல் தொடர்பான மருந்துகளை நோயாளிகளிடம் வழங்கும் தகவல்களை சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தினந்தோறும் தகவல்களை பதிவிட வேண்டும். மருந்தகங்களில் மருத்துவர் களின் பெயர்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கக்கூடாது. யாரேனும் மருந்தகங்களில் மருத்துவர் களின் பெயரை குறிப்பிட்டு சிகிச்சை அளிக்கப் படுவது தெரியவந்தால் மருந்தகங்களின் உரிமை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் மருந்தகங்கள் கரோனா போன்ற பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்  தெரிவித்தார். பின்னர் ஐசிஐசிஐ வங்கி அமைப்பின் சார்பில் ரூ.5.25 இலட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் செறிவூட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரனிடம் மண்டல மேலாளர்கள் இம்தியாஸ் முகமது, ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) நெடுமாறன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அருணா, மருந்து ஆய்வாளர் ராமச்சந்திரன், மருந்தகங்களின் சங்கத்தலைவர் மற்றும் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory