» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலை விபத்துக்களில் 2பேர் பலி: 2பேர் படுகாயம்

வெள்ளி 30, ஜூலை 2021 5:11:05 PM (IST)

ஆலங்குளம் அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் இருவர் படுகாயடைந்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள தெற்கு மாயமான்குறிச்சியைச் சேர்ந்தவர்  பிரபாகரன் (வயது 24). கூலி தொழிலாளி. இவர் இரவு ஆலங்குளத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக் துத்திகுளம் ரோட்டில் சென்ற போது எதிரே நாரணம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (29), ஸ்மித் ஆகியோர் வந்த பைக் திடீரென மோதியது. இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் பைக்குகளில் வந்த 3 பேரும் படுகாயடைந்தனர்.

மூவரும் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரபாகரன் பரிதாபமாக இறந்தார். ஜெயக்குமார், ஸ்மித் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

ஆலங்குளம் அருகே பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பொன்னுச்சாமி நாடார் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் அருண் பாண்டி (வயது 30). இவர் ஆலங்குளத்தில் உள்ள ஒரு பைக் விற்பனை நிலையத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் இரவு ஆலங்குளத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். 

பைக் அடைக்கலப்பட்டணம்-பூலாங்குளம் விலக்கு பகுதியில் வந்த போது எதிரே வந்த லாரி திடீரென பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அருண் பாண்டி சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அருண் பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory