» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வேட்டைக்கு சென்றவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் : வனத்துறை நடவடிக்கை!

சனி 31, ஜூலை 2021 11:22:18 AM (IST)



வாசுதேவநல்லூர் அருகே வனவிலங்கு வேட்டைக்கு சென்றவருக்கு வனத்துறையினர்  ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் கௌதம் அறிவுரையின் பேரில் சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ஸ்டாலின் தலைமையில் வனவர் உபேந்திரன், வனக்காப்பாளர் குகன், அஜித் ராஜ், பூபதி, சிவகுமார் மற்றும் வனப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நாரணபுரம் பீட் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் இருந்து மூவர் தப்பி ஓட முயற்சித்தனர்.  வனத்துறையினர் சுற்றி வளைத்து ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர்  ராயகிரி பூவலிங்கபுரம் தெருவைச் சேர்ந்த மணி மகன் முனீஸ்வரன் (வயது 31 ) என்றும், மூவரும் வனப்பகுதிக்குள் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory