» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பார்க்கிங் வசதி இல்லாத திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை கோரி அமமுக நூதன போராட்டம்

திங்கள் 2, ஆகஸ்ட் 2021 7:46:50 PM (IST)

தூத்துக்குடியில், பார்க்கிங் வசதி இல்லாத திருமண மண்டபங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்ககோரி அமமுகவினர் நூதன போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மணி நகரில் ஏராளமான திருமண மண்டபங்கள் உள்ளன. இவற்றிற்கு வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி இல்லாததால் தெருக்களில் வாகனங்களை நிறுத்தி பொது போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே பார்க்கிங் வசதி இல்லாத திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமமுக 30வது வட்ட செயலாளர் காசிலிங்கம் ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

ஆனால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை கண்டித்து,  அமமுக 30வது வட்ட செயலாளர் நடிகர் காசிலிங்கம் தலைமையில் சங்கரநாராயணன் பூங்கா முன்பு பாய் விரித்து தூங்கும் போராட்டம் நடைபெற்றது. இதில், வட்ட  அவைத் தலைவர் செந்தூர்பாண்டி, பொருளாளர் சுப்பையா, நிர்வாகிகள் மகேஷ், பாக்கியராஜ், ரவிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மக்கள் கருத்து

TN69Aug 4, 2021 - 07:52:15 AM | Posted IP 162.1*****

போராட்டம் செய்வதற்கு வாழ்த்துக்கள் அதே சமயம் நமது தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் இருந்து பழைய துறைமுகம் வரை உள்ள சாலை வரைக்கும் அதே போல பழைய போஸ்ட் ஆபீஸ்ல இருந்து தேவர் புரம் ரோடு வரைக்கும் பார்க்கிங் வசதி கிடையாது ரோட்டுலதான் வண்டியை நிறுத்துவோம் அதேபோல்தான் வண்டி வாகன போக்குவரத்து நடக்கிறது பஸ் லாரி பஸ் சைக்கிள் ஸ்கூட்டர் எல்லாமே போது அதற்கும் சேர்த்து போராட்டம் பண்ணலாமே எல்லாமே எவ்வளவு போராட்டமாக இருக்கும் முட்டுச்சந்தில் மண்டபத்துக்கு அருகில் பார்க்கிங் வசதி இல்லைன்னு சொல்லி போராட்டம் பண்ணா மட்டும் போதுமா தூத்துக்குடி மாநகராட்சியில் டெவலப் பண்றதுக்கு எவ்வளவு இருக்கு அது கண்டு போராட்டம் பண்ணா நல்லா இருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் நம்ம அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிக்கும் வாழ்த்துக்கள் முதல் தொடக்கம்., தொடரட்டும் உங்கள் சீரிய முளக்கம்

TN69Aug 4, 2021 - 07:51:43 AM | Posted IP 162.1*****

தமிழ்ச்செல்வன்Aug 3, 2021 - 06:20:23 PM | Posted IP 162.1*****

ராமலட்சுமி மண்டபம், கனி பேலஸ், சந்திர மகால், KSPS மண்டபம், தன்பாடு உப்பு மண்டபம் உட்பட எந்த மண்டபத்திலும் பார்க்கிங் வசதி கிடையாது. எப்படி மாநகராட்சி அனுமதி கொடுக்கிறது? எவ்வளவு லஞ்ச பணம் கைமாறியது?

உண்மைAug 3, 2021 - 10:17:58 AM | Posted IP 108.1*****

எந்த திருமண மண்டபங்கள் சொல்லுங்க . பொதுமக்களுக்கு புரியும்படியாக இருக்கும்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.

மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Tirunelveli Business Directory