» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோயில்களில் ஆக.4 முதல் 8 வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது - ஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 3, ஆகஸ்ட் 2021 11:35:44 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில், கோவில்பட்டி பூவனநாதசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் 04.08.2021 முதல் 08.08.2021 முடியவுள்ள நாட்களில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் இன்றி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு என தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அறிவுரை வழங்கியுள்ளார்கள். 

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழ்நிலைகளை கருத்தில்கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், ஞாயிறு (01.08.2021), ஆடிக்கிருத்திகை (02.08.2021), ஆடி 18ம் நாள் (03.08.2021), ஆடி அமாவாசை (08.08.2021) விசேஷ நாட்களை முன்னிட்டு அதிகளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்பொருட்டு 01.08.2021, 02.08.2021, 03.08.2021 மற்றும் 08.08.2021 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் புதன் (04.08.2021) முதல் ஞாயிறு (08.08.2021) ஆகிய நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட வாய்ப்பு உள்ளதாக தெரிய வருவதால் மேற்கூறிய 04.08.2021 முதல் 08.08.2021 முடிய திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும், மேலும் கோவில்பட்டி வட்டம் கோவில்பட்டி அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஆடிப்பூரம் (10.08.2021), ஆடி கடைசி வெள்ளிக்கிழமை(13.08.2021) ஆகிய நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட வாய்ப்பு உள்ளதாக தெரிய வருவதால் மேற்கூறிய 10.08.2021, 13.08.2021 ஆகிய நாட்களில் திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும், மேற்படி நாட்களில் திருக்கோயிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

1. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் நகர் மற்றும் வட்டம்.

2. அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வட்டம்

3. அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில், கோவில்பட்டி நகர் மற்றும் வட்டம்.

மேலும் 04.08.2021 முதல் 08.08.2021 முடியவுள்ள நாட்களில் பொதுமக்கள் மேற்கூறிய திருக்கோயில்களில் அதிக அளவில் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாவுவதைத் தடுக்கும் பொருட்டு மேற்குறிப்பிட்ட மூன்று திருக்கோயில்களிலும் 04.08.2021 முதல் 08.08.2021 முடியவுள்ள நாட்களில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டவாறு திருக்கோயிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் எனவும், பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாமான்யன்Aug 3, 2021 - 12:57:58 PM | Posted IP 162.1*****

ஆகஸ்ட் 5 பனிமய மாதா கோவிலில் அனுமதி உண்டா? சார்

kumarAug 3, 2021 - 12:54:31 PM | Posted IP 108.1*****

hindu kovilgalil arasangam nadaimurai paduthum anaithu valigatu nerimuraigalum murayaga pinpatrapadukirathu...pinbu yen intha thadai? vendumanal innum athigamaga nerimuraigalai amalpaduthi kovilgalil pakthargalai anumathikalame.... arasu pariseelikuma??

ஹ. சங்கரநாராயண் ன்Aug 3, 2021 - 11:49:37 AM | Posted IP 173.2*****

எந்த அறிக்கை ஆனாலும் சற்று முன்னதாக அறிவித்தால் நல்லது. அதே போல, மற்ற மதத்தினர் நடத்தும் விழாக்கறக்கும் இது போன்று பாரபட்சமின்றி நிர்வாகமும் | அரசியலும் நடந்தால் நன்ராக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory