» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குத்துக்கல்வலசை கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா

புதன் 4, ஆகஸ்ட் 2021 10:20:47 AM (IST)



தென்காசி அருகேயுள்ள குத்துக்கல்வலசை காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெற்றது.

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை அருள்மிகு காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு  ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெற்றது. காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் குற்றாலத்தில் இருந்து புனித நீர் மற்றும் பூந்தட்டு கொண்டுவரப்பட்டது. பொங்கலிடும் வைபவம் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்க சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கணேசன், விக்னேஷ் சுப முருகன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ண குமரன் மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory