» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

வெள்ளி 24, செப்டம்பர் 2021 3:53:14 PM (IST)

நெல்லையில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை துன்புறுத்தியதாக கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் பொன்மாரி (30). இவருக்கும் நெல்லை டவுனை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் நெல்லை டவுனில் உள்ள மாரியப்பன் வீட்டில் குடியிருந்து வந்தனர். அப்போது கணவர் மாரியப்பனும், அவரது உறவினர்களும் கூடுதல் வரதட்சணை கேட்டு பொன்மாரியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவர் வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கு சென்ற பொன்மாரி, நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் பொன்மாரியின் கணவர் மாரியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பன்னீர் செல்வம், சித்ரா, மணி, புவனேஸ்வரி ஆகிய 5 பேர் மீது போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory