» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உள்ளாட்சி தேர்தலில் 90 வயது பெருமாத்தாள் வெற்றி: ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு!

புதன் 13, அக்டோபர் 2021 12:42:08 PM (IST)



நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் என்பவர் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம்  பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டியை சேர்ந்த பெருமாத்தாள் என்பர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இருவரை டெபாசிட் இழக்க செய்ததோடு மட்டுமல்லாமல்,  இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளரை விடவும் ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  வெங்கடாம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் 22 வயதே ஆன சாருகலா வெற்றி பெற்றுள்ளார். 3336 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் மூன்று வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார் பொறியியல் பட்டதாரியான சாருகலா.

தென்காசி; ஊராட்சி வெற்றி பெற்றவர்கள்விபரம்

தென்காசி மாவட்டம் தென்காசி ;ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள், அவர்கள் சார்ந்த கட்சி மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:

1-வது வார்டு- ஆ.கலாநிதி-திமுக-2298

2-வது வார்டு- கா.பிரியா-அதிமுக-1349

3-வது வார்டு- மு.அழகுசுந்தரம்;-திமுக-2715

4-வது வார்டு-மு.சேக்அப்துல்லா- திமுக-2321

5-வது வார்டு-இரா.செல்வவிநாயகம்;-திமுக- 1901

6-வது வார்டு- இரா.வினோதி- திமுக-2345

7-வது வார்டு-ச.மல்லிகா – திமுக- 2530

8-வது வார்டு-ஆ.சுப்புலட்சுமி-திமுக- 2563

9-வது வார்டு- மு.கனகராஜ்முத்துப்பாண்டியன்-திமுக-2560

ஆலங்குளம் ஊராட்சி 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம்ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள், அவர்கள் சார்ந்த கட்சி மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:

1-வது வார்டு- இரா.செல்வக்கொடி –திமுக- 1763

2-வது வார்டு-மு.பாலசரஸ்வதி-திமுக- 2092

3-வது வார்டு- மு.வள்ளியம்மாள்-திமுக-2242

4-வது வார்டு-பா.முரளிதரன்- காங்கிரஸ்-2724

5-வது வார்டு-வை.பால்துரை-திமுக- 1076

6-வது வார்டு- ஆ.அந்தோணிசாமி- சுயேட்சை-1300

7-வது வார்டு-வெ.கிருஷ்ணம்மாள்- சுயேட்சை-1048

8-வது வார்டு-கோ.மலர்கொடி-திமுக- 2405

9-வது வார்டு- ர.முத்துமாரி-திமுக-2678

10-வது வார்டு- சா.சேக்முகம்மது-திமுக-2047

11-வது வார்டு-பா.முருகேஸ்வரி-சுயேட்சை-1913

12-வது வார்டு-சி.சுபாஷ்சந்திரபோஸ்-திமுக-1593

13-வது வார்டு-ம.திவ்யா-திமுக-2121

14-வது வார்டு-மா.ஆறுமுகச்சாமி-திமுக-1852

16-வது வார்டு-ச.சுப்புக்குட்டி-சுயேட்டை-1492

17-வது வார்டு-க.கலா-காங்கிரஸ்-1878

18-வது வார்டு-ஆ.எழில்வாணன்-திமுக-2856

19-வது வார்டு-தி.பசுபதிதேவி-திமுக-1989

20-வது வார்டு-ச.அரிநாராயணன்-காங்கிரஸ்-1428

21-வது வார்டு-வி.சண்முகராம்-திமுக-1430

22-வது வார்டு-சு.சங்கீதா-திமுக-1971

23-வது வார்டு-ச.மீனா-திமுக-1528


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory