» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆக்ஸ்போர்டு பள்ளியில் உலக கைகள் கழுவும் தினம்

புதன் 13, அக்டோபர் 2021 4:30:14 PM (IST)



தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக கைகள் கழுவும் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக கைகள் தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை வகித்தார். பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.

கைகள் கழுவும் முறைகள் குறித்து தென்காசி வட்டார சுகாதார கண்காணிப்பாளர் வேலு, சுகாதார ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் செயல் விளக்கம் செய்து காட்டினர்.உலக கைகள் கழுவும் தின உறுதிமொழியினை மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

கைகள் கழுவும் பழக்கத்தை அன்றாட வாழ்வில் நான் தினமும் கடைப்பிடிப்பேன். தினமும் கைகளை சோப்பு மற்றும் சோப்பு கரைசல் போட்டு ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 20 வினாடிகள் கழுவுவேன். இதன் மூலம் ஏற்படும் நன்மைகளை எனது நண்பர்களுக்கும், சுற்றத்தாருக்கும் எடுத்துக் கூறுவேன்.

உணவு உட்கொள்வதற்கு முன்பும், பின்பும், கழிவறையை உபயோபப்படுத்திய பின்பும், பெறியில் சென்று வீடு திரும்பிய பின்பும் தவறாமல் கைகளை கழுவுவேன். முறையாக கைகளை கழுவுவதன் மூலம் வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, கொரோனா போன்ற சுவாச தொற்று நோய்கள், குடற்புழுக்கள், டைபாய்டு, சீதப்பேதி போன்ற நோய்களை தவிர்க்க முடியும் என்பதை அறிவேன்.

குழந்தைகளுக்கு கைகள் கழுவும் முறைகளை தெளிவாக எழுத்துரைப்பதன் மூலம் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு, கல்வியில் முன்னேற்றம் காண முடியும் என்பதை அறிவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory