» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி ரவுடி என்கவுண்டரில் நடந்தது என்ன? எஸ்பி ஜெயக்குமார் பேட்டி

வெள்ளி 15, அக்டோபர் 2021 5:53:37 PM (IST)



தூத்துக்குடியில் போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு ரவுடி தப்ப முயன்றதால் போலீசார் என்கவுணட்டர் நடத்தியதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி துரைமுருகன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், எண்கவுன்டரில் கொல்லப்பட்ட துரைமுருகன் மீது தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட 8 மாவட்டங்களில் 7 கொலை வழக்கு, 21 வழிப்பறி, 6 திருட்டு உட்பட 35 வழக்குகள் உள்ளன. 2015 ஆண்டு முதல் அவர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார். மேலும், தனது நண்பர் ரஜினி முருகன், உட்பட 7பேரை கடத்தி கொலை செய்து சடலத்தை புதைத்துள்ளார். 

இந்நிலையில், கடந்த வாரம் பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்தனர். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தனிப்படை போலீசார் தூத்துக்குடியில்  தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில் துரைமுருகன் உட்பட 3பேர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, மற்றும் காவலர் டேவிட் ஆகியோர் துரைமுருகனை சுற்றி வளைத்தனர். அப்போது அவர் போலீசாரை அரிவாளால் வெட்டியதால் சப் இன்ஸ்பெக்டர் 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டதில் துரைமுருகன் உயிரிழந்துவிட்டார். காயம் அடைந்த 2 காவலர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து

சிவா கத்தார்Oct 16, 2021 - 02:03:29 PM | Posted IP 162.1*****

ippadi neenka senja than ithu namma policenu ellorukkum solla thonum ,unkalukku royal salute sir.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory