» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும்: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

சனி 16, அக்டோபர் 2021 3:16:54 PM (IST)



குற்றாலம் அருவிகளில்  குளிக்க அனுமதிக்க வேண்டுமென அரசுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இடையிடையே இதமான வெயில் அடிக்கும். இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருவார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலத்தில் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட வில்லை.தற்போது குற்றாலம் மலைப்பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.  இதனால் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் தண்ணீர் பரவலாக பாய்ந்து வருகிறது. இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி, குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் கொட்டுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் இங்குள்ள வியாபாரிகள், ஆட்டோ-வேன் டிரைவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். தற்போது அரசு நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி அளித்துள்ளது. சில சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் செல்வதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. ,சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அரசு அனுமதி வழங்கி உள்ளது.ஆனால் குற்றாலத்தில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த தடையை அகற்றி குற்றாலத்தில் குளிப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory