» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அமைச்சர் கீதாஜீவனுக்கு குடியரசு தலைவர் விருது!

வெள்ளி 3, டிசம்பர் 2021 3:45:49 PM (IST)



மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்கியதற்காக முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் கீதாஜீவனுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கினார். 

டெல்லியில் இன்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற 2020ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சமூக நலம் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்துகொண்டார். இவ்விழாவில் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு விருதினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கிட அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் தெரிவிக்கையில்: ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) பிரகடனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 3ஆம் நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேற்படி தினத்தன்று மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நாளில் மாற்றுத் திறனாளிகள் தங்களின் தனித்துவ திறமைகளை வெளிப்படுத்திட மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதுடன் மாற்றுத் திறனாளிகளில் சிறந்த நபர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறந்த சேவை வழங்கியவர்களுக்கு மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் உரிமையேற்றத்திற்கான தேசிய விருதுகள் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமையேற்றத்தினை ஊக்குவிப்பதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக சேலம் மாவட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஆர்.லால்வேனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

K.ganeshanDec 4, 2021 - 09:50:32 PM | Posted IP 162.1*****

Congratulations., .

சிவா கத்தார்Dec 4, 2021 - 12:11:18 PM | Posted IP 162.1*****

ithu 2020 award .appo yaaru minister avarukku than seranum, neenka innum sirappa seyal pattu ella varudamum award pera valtthukkal madamji......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory