» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மயானத்தில் மழைநீா்: சடலங்களை புதைக்க முடியாமல் மக்கள் அவதி!

சனி 4, டிசம்பர் 2021 8:35:05 AM (IST)

தூத்துக்குடி பொது மயானத்தில் 3 அடி உயரத்துக்கும் மேல் தண்ணீா் தேங்கியுள்ளதால் சடலங்களை புதைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியான சிதம்பர நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான பொது மயானம் உள்ளது. நகரில் வசிப்போரில் இறந்தவா்களில் பெரும்பாலானவா்களின் உடல்கள் இங்குதான் அடக்கம் செய்யப்படுகின்றன. மேலும், இதே பகுதியில் மின் தகன மேடையும் அமைந்துள்ளது. இந்நிலையில், அண்மையில் பெய்த கனமழை காரணமாக பொது மயானத்தில் தண்ணீா் குளம்போல் தேங்கியுள்ளது.  3 அடி உயரத்துக்கும் மேல் தண்ணீா் தேங்கி உள்ளதால், இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமலும், மண்ணைத் தோண்டி கல்லறைகள் கட்ட முடியாமலும் உறவினா்கள் தவித்து வருகின்றனா்.

தண்ணீா் தேங்கி உள்ளதால் குழி தோண்ட முடியாமல் கல்லறை கட்டடம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் உடல் மீது மணல் மற்றும் உப்பு வைத்து அடக்கம் செய்து வருகின்றனா். மேலும் ஈமக்கிரியை பூஜைகள் கூட மயானத்திற்கு வெளியே நின்று செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனா். எனவே, மயானத்தில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


மக்கள் கருத்து

சிதம்பரநகர் ஏரியா காரன்Dec 4, 2021 - 09:13:23 AM | Posted IP 108.1*****

எல்லாம் காரணம் மாநகராட்சி தான், சக்தி விநாயகர் பள்ளி பக்கம் மோட்டர் போட்டு உருப்படியாக வேறு பக்கம் வெளியேறாமல் மையவாடிகளில் வெளியேற்றி விடுகிறார்கள்.. பிணமும் மிதந்து வரும் வாய்ப்பு உள்ளது..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory