» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி : காவல் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகை!

செவ்வாய் 7, டிசம்பர் 2021 10:41:47 AM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது காவல்துறை வாகனம் மோதிய விபத்தில் ரோடு ரோலர் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி சிவந்தாகுளம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமணி மகன் முத்துசெல்வம் (63). கோரம்பள்ளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரோடு ரோலர் ஆப்ரேட்டராக வேலைபார்த்து வருகிறார். இன்று காலை பைக்கில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி 3வது மைல் பாலம், எப்.சி.ஐ., குடோன் அருகே சென்றபோது, தூத்துக்குடி ஆயுதப்படை அலுவலத்தில் இருந்து எஸ்பி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் அவரது பைக் மீது மோதியது. 

இதில் நிலைடுமாறி போலீஸ் வாகனத்தின் பின்சக்கரத்தின் சிக்கிய முத்து செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து நடந்த இடத்தினை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், டவுண் டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து, போலீஸ் வாகனத்தை ஓட்டிவந்த மதுரை அலங்காநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜபாண்டி என்ற காவலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த முத்துசெல்வத்தின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தென்பாகம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். 


மக்கள் கருத்து

மக்கள்Dec 8, 2021 - 11:39:00 AM | Posted IP 162.1*****

உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும். விபத்து நடத்தியர். மீது சிறையில் அடைக்க வேண்டும்.

testDec 7, 2021 - 04:41:21 PM | Posted IP 162.1*****

Tamil

இந்த உலகம் அப்படிதான்Dec 7, 2021 - 12:04:08 PM | Posted IP 108.1*****

டிரைவர் காவலராக இருந்தாலும் தண்டனை கிடையாது உண்மை ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory