» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புகார் மனு கொடுத்தவரை தாக்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

செவ்வாய் 7, டிசம்பர் 2021 12:24:41 PM (IST)

தாழையூத்து அருகே புகார் மனு கொடுத்தவரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள பருத்திக்குளம் சித்தார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாரி. துப்புரவு பணியாளர். இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2019-ம் ஆண்டு எங்கள் ஊரில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் எடுக்க சென்ற என்னிடம் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஒரு பெண் தகராறில் ஈடுபட்டு சாதியை சொல்லி திட்டினார். 

இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்தேன். இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரணை நடத்தினார். என்னிடமும், எனது கணவரிடமும் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு நான் குற்றம்சாட்டிய பெண்ணுக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் செயல்பட்டு என்னை தாக்கினார். எனவே, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், 'சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம். மேலும், இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலையத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. அறிவுறுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory