» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் அருவிகளில் டிச.20 முதல் குளிக்க அனுமதி : புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

புதன் 8, டிசம்பர் 2021 8:16:18 AM (IST)

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் டிச.20 ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்க படுவார்கள் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அனைத்து அருவிகளிலும்  போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்ட நிலையில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகள், குற்றாலம் பகுதி வியாபாரிகள், பொதுமக்கள், சமூகநல ஆர்வலர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வரும் 20.12.2001 முதல் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி குற்றாலம் மெயின் அருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்களும் பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 6 பெண்களும், குளிக்க அனுமதிக்க படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் குற்றாலம் அருவிகளில் குளிக்க வருகைதரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த  எட்டு மாதங்களாக குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வரும் 20.12.2021 முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைத்து அருவிகளிலும் குளிக்கலாம் என்கிற அனுமதி நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் குற்றாலம் பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory